Admission Enquiry 2023-24
A Journey To A Better Future Begins With Us
நாங்கள் 'மனப் பக்குவம், வாழ்க்கை பாடம், வீட்டை போன்ற உணர்வு' இவற்றை உறுதியாக நம்புகிறோம். எங்களின் முதல் ஆர்கிட் மொட்டு 18 வருடங்களுக்கு முன் ஹைதராபாத் நகரில் மலர்ந்து, இப்போது 36 சர்வதேச பள்ளிகளாக விரிவடைந்துள்ளது, 30000 மாணவர்களின் வாழ்வில் கல்வி எனும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளோம். ஒவ்வொரு கல்வியாண்டிலும் புது மைல்கற்களை அடைந்து வருகிறோம். பெங்களூரு, மும்பை, புனே, கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் சென்னை நகரங்களில் தரமிக்க கல்வி வழங்குவதால் முன்னணி சர்வதேச பள்ளியாக கருதப்பட்டு வருகிறோம்.
பெருந்தொற்று காலம் உலகை ஸ்தம்பிக்க செய்துள்ளது, ஆனால் எங்கள் ஆர்கிட்டில் கல்வி கற்பதை ஸ்தம்பிக்க செய்ய வில்லை. எங்கள் கல்வி போதிக்கும் நிபுணர்கள் 'இடைநில்லா கல்வி' வழங்குவதை உறுதி செய்யும் வகையில் வகுப்பறையினை திரையில் அடக்கிவிட்டார்கள். ஆர்கிட் மாணவர்கள் இரண்டு மடங்கு உற்சாகத்துடன் தங்கு தடையில்லாமல் கல்வி கற்று வருகின்றனர். எங்கள் ஆசிரிய நிபுணர்களும் பல்வேறு புதுமைகளை தொடர்ந்து நடைமுறைப்படுத்தி கற்றலை கொண்டாட்டமிக்க ஒன்றாக உருவாக்கி வருகின்றனர்.